டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவியின் ஆவணப்படத்தை திரையிட தென்னாபிரிக்கா தடை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் குறித்த 'மெலனியா' (Melania) என்ற ஆவணப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், தென்னாபிரிக்காவில் மட்டும் இதனைத் திரையிட அந்நாட்டு விநியோகஸ்தர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தென்னாபிரிக்காவின் முன்னணி திரைப்பட விநியோக நிறுவனமான 'பிலிம்பினிட்டி' (Filmfinity), தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இந்த ஆவணப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளது.
மோதல்
தென்னாபிரிக்காவின் முக்கிய திரையரங்கு சங்கிலிகளான 'ஸ்டெர் கினேகர்' மற்றும் 'நு மெட்ரோ' ஆகியவற்றின் இணையதளங்களில் இருந்து மெலனியா குறித்த விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
அமேசான் நிறுவனம் இந்த ஆவணப்படத்தின் உரிமையை சுமார் 40 மில்லியன் டொலர் கொடுத்து வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தென்னாபிரிக்கா இந்த முடிவை எடுத்ததற்குக் குறிப்பிட்ட காரணத்தைச் சொல்லாவிட்டாலும், அமெரிக்காவுடனான அதன் உறவு கடந்த ஓராண்டில் மிக மோசமடைந்திருப்பதே உண்மையான காரணம் எனப் பார்க்கப்படுகிறது.
மேலும், தென்னாபிரிக்காவில் 'வெள்ளை இனப்படுகொலை' நடப்பதாக ட்ரம்ப் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தமை அந்நாட்டு அரசை அதிருப்தி அடையச் செய்துள்ளது. தென்னாபிரிக்கப் பொருட்கள் மீது ட்ரம்ப் அரசாங்கம் அதிக வரி விதித்ததும், உதவித் திட்டங்களை ரத்து செய்ததும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அத்துடன், இஸ்ரேலுக்கு எதிராகத் தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) வழக்குத் தொடர்ந்ததை அமெரிக்கா கடுமையாக எதிர்த்தது இரு நாடுகளுக்கும் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப்பின் இரண்டாவது பதவியேற்புக்கு முந்தைய 20 நாட்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம், தற்போது தென்னாபிரிக்காவில் ஒரு ராஜதந்திர மோதலாக உருவெடுத்துள்ளது.
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan