பண்டிகைக் காலத்தில் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்
பண்டிகைக் காலத்தில் விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
பண்டிகைக் காலங்களில் இடம்பெறக் கூடிய திடீர் விபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப் பிரிவு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
பண்டிகைக் கொண்டாட்டங்கள்
எல்லா ஆண்டுகளிலும் புத்தாண்டு கொண்டாட்ட காலங்களில் 28000 முதல் 30000 வரையிலான விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி பெறுவதாக குறித்த பிரிவின் மருத்துவ நிபுணர் டொக்டர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு வாரத்தில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக 75 முதல் 100 பேர் வரையில் ஆண்டு தோறும் மரணிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே விபத்துக்களை தவிர்க்கும் வகையில் பொறுப்புடன் பண்டிகைக் கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri