அம்பாறையில் கட்டாக்காலி மாடுகளினால் தொடரும் தொந்தரவுகள்

Sri Lanka Police Ampara Sri Lanka
By Farook Sihan Jul 01, 2025 04:09 AM GMT
Report

கட்டாக்காலி மாடுகள் தினமும் ஆக்கிரமிப்பதனால் பொதுப்போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் பகல் இரவு பாராது ஆக்கிரமித்துள்ள கட்டாக்காலி மாடுகள் தினமும் பொதுப்போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தும் வகையில் நடமாடி வருகின்றன.

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கதி

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கதி

கட்டாக்காலி மாடுகள்

இந்தபகுதியில் உள்ள அரச தனியார் நிறுவனங்களிற்கு முன்பாக மாடுகள் தினமும் சஞ்சாரம் செய்வதுடன் அந்தப்பகுதிகளை சுகாதார சீர்கேடான இடங்களாக மாற்றுவதுடன் அந்தப்பகுதியில் துர்நாற்றமும் ஏற்படுகின்றது.

அம்பாறையில் கட்டாக்காலி மாடுகளினால் தொடரும் தொந்தரவுகள் | Cattle Menace Hits Daily Transport

மேலும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம், கல்முனை மாநகர சபை ,கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை, கல்முனை பிரதான பேருந்து தரிப்பிடம், இலங்கை மின்சார சபை ,கல்முனை பிரதேச செயலகம் ,வங்கிகள் ,உள்ளிட்ட பகுதிகளில் இரவு வேளையில் கட்டாக்காலி மாடுகள் நாய்கள் நடமாடுவதுடன் சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.

வீதிகளில் இரவு வேளையில் நடமாடித்திரியும் சுமார் 25 இற்கும் மேற்பட்ட கறுப்பு, வெள்ளை , மஞ்சள் வர்ணம் கொண்ட கட்டாக்காலி மாடுகள் மாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக அலைந்து திரிகின்றன.

எரிபொருள் விலை மாற்றம்: பேருந்து கட்டணம் தொடர்பில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு

எரிபொருள் விலை மாற்றம்: பேருந்து கட்டணம் தொடர்பில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு

போக்குவரத்து இடைஞ்சல்

இதனால் வீதிப் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து வருவதுடன் வீதி விபத்துக்களும் இடம்பெறுவதற்கு காரணமாக அமைகின்றது.

அம்பாறையில் கட்டாக்காலி மாடுகளினால் தொடரும் தொந்தரவுகள் | Cattle Menace Hits Daily Transport

இவ்வாறான கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் போக்குவரத்து இடைஞ்சல் விபத்துக்களை குறைக்கும் வகையிலும் கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபை மற்றும் பொலிஸார் முன்னெடுத்த போதிலும் தற்போது இவ்வாறு மேற்கொள்ளாமையினால் பிரதான வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் மாடுகள் படுத்துறங்குவது நிற்பது போன்றவற்றினால் பொதுமக்களும் வாகன சாரதிகளும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதி போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படுகின்ற இவ்வாறான கட்டாகாலி மாடுகளை கல்முனை மாநகர சபை அதிகாரங்களைக் கொண்டு ஏன் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

 வீதி விபத்துக்கள்

மாநகர சபையினால் கடந்த காலங்களிவ் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டக்காலி மாடுகளை பொலிஸாருடன் இணைந்து பிடித்ததை போன்று எதிர்காலத்தில் பிடித்து கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் ஏற்படுகின்ற வீதி விபத்துக்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

அம்பாறையில் கட்டாக்காலி மாடுகளினால் தொடரும் தொந்தரவுகள் | Cattle Menace Hits Daily Transport

முன்னர் 1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் மாநகர பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கட்டக்காலி மாடுகள் கடந்த காலங்களில் பிடிக்கப்பட்டு தண்டம் அறவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US