அரசின் மீது கத்தோலிக்க அமைச்சர்கள் அதிருப்தியில்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கத்தோலிக்க ராஜாங்க அமைச்சர்கள் அண்மைய காலமாக நடந்துள்கொள்ளும் விதத்தில் சிக்கலான தன்மையை காணக்கூடியதாக உள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் சம்பந்ததாக அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்சர்கள் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை காணமுடிகிறது.
இதனை முதலில் ஆரம்பித்தவர் ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா. அது மாத்திரமல்லாது தனது அமைச்சு சம்பநதப்பட்ட நிகழ்வுகளில் கூட அவர் கலந்துக்கொள்வதில்லை.
குருணாகல் அதிவேக நெடுஞ்சாலை திறப்பு விழாவில், துறைக்கு பொறுப்பான ராஜாங்க அமைச்சரான லங்சா கலந்துக்கொள்ளவில்லை.
அதேவேளை ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகிய அருந்திக பெர்னாண்டோவும் ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்காதது குறித்து பேசினார்.
ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் இது அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளை அவர் விமர்சித்தார். பேராயரை அருகில் வைத்துக்கொண்ட அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக சட்டத்தை நிறைவேற்றாது குறித்து பேராயர் பகிரங்கமாக தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். அது மாத்திரமல்லாது வத்திகானில் வாழும் புனித பாப்பரசருக்கும் கடிதம் மூலம் இதனை அறிவித்திருந்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பேராயர் கொண்டுள்ள நிலைப்பாடு சம்பந்தமாக அரசாங்கத்தில் இருக்கும் கத்தோலிக்க அமைச்சர்களுக்கு அவர்களின் சமூகம் கடும் அழுத்தங்களை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
குறைந்தது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக உண்மையை அறிந்துக்கொள்வது பாதிக்கப்பட்ட கத்தோலிக்க குடும்பங்களுக்கு உரிமை இருப்பதாக பேராயர் சுட்டிக்காட்டி இருந்தார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 7 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam