கிளிநொச்சியில் காணியற்ற மக்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ள விசேட நடவடிக்கை
கிளிநொச்சி - பூநகரி மற்றும் ஜெயபுரம் பகுதியில் காணியற்ற மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்து மரமுந்திரிகை செய்கையில் ஈடுபடுத்தவதற்கான நடவடிக்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக நேற்றைய தினம் (05.02.2024) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 472 ஏக்கர் காணிகளே பூநகரி மற்றும் ஜெயபுரம் ஆகிய பிரதேசத்தினை சேர்ந்த காணிகளற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
நியாயமான விலைக்கு கொள்வனவு
மேலும், காணிகளைப் பெற்றுக் கொள்வோர் மரமுந்திரிகை செய்கையில் ஈடுபடுவதற்கான ஒத்துழைப்புக்களை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் வழங்கவுள்ளது.
அத்தோடு, அறுவடை செய்யப்படும் விளைச்சலை நியாயமான விலைக்கு கொள்வனவு செய்வதற்கும் மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் பூநகரி மற்றும் ஜெயபுரம் பகுதியை சேர்ந்த சுமார் 100 குடும்பங்களால் நேரடியாக பொருளாதார நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மரமுந்திரிகை பதனிடும் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு தேவையான மூலப் பொருட்கள் நியாயமான விலையில் தாராளமாக கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |