யாழ். சாவல்கட்டு இறங்குதுறை பிரச்சினைக்கு தீர்வு கோரி கடற்றொழிலாளர்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் - சாவல்கட்டு பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தமது இறங்குதுறை பிரச்சினைக்கு தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று (06.02.2024) காலை 8.30 மணியளவில் யாழ். மாவட்ட செயலத்திற்கு முன்பாக ஆரம்பமாகி மாகாண ஆளுநர் செயலகம் வரை சென்றடைந்தது.
இதன்போது, மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரை சந்தித்த சாவல்கட்டு கடற்றொழிலாளர்கள் தமது பிரச்சினைகளை தெரியப்படுத்தியுள்ளனர்.
தற்காலிகமாக நிறைவு பெறல்
தொடர்ந்து ஆளுநர் செயலக நுழைவாயிலை மறித்து நுழைவாயில் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், தாங்கள் ஆளுநரை சந்தித்த பின்னரே போராட்டத்தை நிறுத்துவோம் என தொடர்ந்த போராட்டம் நண்பகல் வரை நீடித்துள்ளது.
இந்நிலையில் ஆளுநர் தற்போது யாழில் இல்லாத காரணத்தினால் எதிர்வரும் 8ஆம் திகதி ஆளுநரை சந்திக்க முடியும் என வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன் அறிவித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |