யாழ்.சாவகச்சேரி நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் இன்றி அழைக்கப்பட்ட வழக்குகள்!
யாழ்.சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகள் இன்று(8) முன்னிலையாகாத நிலையிலும் வழக்குகள் அழைக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் கடமையாற்றும் பெண் சட்டத்தரணி ஒருவர் போலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டில் யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்று முன்தினம் (06) கைது செய்யப்பட்டார்.
அதனையடுத்து, மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
வழக்குகள்
இந்தநிலையில், சட்டத்தரணியின் கைது சட்டத்திற்கு உட்பட்டு இடம்பெறவில்லை எனவும், பொலிஸார் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டனர் எனவும் தெரிவித்து சட்டத்தரணிகள் யாழ். நீதிமன்றம் முன்பாக இன்று (8) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக சாவகச்சேரி நீதிமன்றத்தின் வழக்குகள் சட்டத்தரணிகள் இன்றி அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









