முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு
முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்ய உள்ளது.
முன்னாள் அமைச்சர்கள்
முன்னாள் அமைச்சர்கள் ரோஹித்த அபேகுணவர்தன, எஸ்.எம்.சந்திரசேன, ரவி கருணாநாயக்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கு எதிராக இந்த வழக்குகள் தொடரப்படவுள்ளன.
கடந்த வாரம் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்கை தாக்கல் செய்தது.
முறைகேடாக சொத்து சேர்த்தமை
மேலே குறிப்பிடப்பட்ட முன்னாள் அமைச்சர்களில் சிலருக்கு எதிராக இதற்கு முன்னர் ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்குகளை தொடர்ந்தது. எனினும் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக அந்த வழக்குகள் திரும்பெறப்பட்டன.
இந்த நிலையில், திரும்பபெறப்பட்ட வழக்குகள் மற்றும் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சில வழக்குகளையும் தாக்கல் செய்ய ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.
முறைகேடாக சொத்து சேர்த்தமை, கேள்வி மனு மோசடி போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.





உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
