ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
ஜோன்ஸ்டனுக்கு எதிராக மனு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட்ட மூவருக்கு எதிராக, முன்னர் திரும்பப் பெறப்பட்ட குற்றப்பத்திரிகைக்கு பதிலாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
தொழிநுட்ப பிரச்சினை காரணமாக குற்றப்பத்திரிகைகளை திரும்பப் பெறுவதற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்ததை அடுத்து, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவரை ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 28ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் எழுத்துமூல அனுமதியுடன் கொழும்பு மேல் நீதிமன்றில் புதிய குற்றப்பத்திரிகையை இலஞ்ச ஆணைக்குழு,இன்று தாக்கல் செய்துள்ளது.
8.4 மில்லியன் நட்டம்
இதன்படி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, லக் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ராஜ் மொஹிதீன் மொஹமட் சக்கீர் ஆகியோருக்கு எதிராக, 2012 காலகட்டத்தில் தேர்தல் பணிக்காக கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் 8.4 மில்லியன் ரூபா சட்ட விரோத நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை முதலாம் குற்றவாளியான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது சட்டவிரோதமான முறையில் சதொச ஊழியர்களை தேர்தல் பணிகளுக்காக ஈடுபடுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.



