UK Spouse Visa! பிரித்தானியா அரசு அறிமுகம் செய்துள்ள புதிய கட்டுப்பாடுகள்
பிரித்தானியாவில் பணி செய்வோர், தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் அழைத்துக்கொள்வது தொடர்பில் இந்த ஆண்டில் பிரித்தானியா அரசு சில புதிய கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்துள்ளது.
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக, ’Restoring control over the immigration system’ என்னும் தலைப்பின் கீழ் சில புதிய புலம்பெயர்தல் விதிகளை பிரித்தானியா அரசு அறிமுகம் செய்துள்ளது.
மாற்றங்கள்
பிரித்தானியாவில் பணி செய்யும் வெளிநாட்டவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையை தங்களுடன் பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்வதற்காக வழங்கப்படும் UK Spouse Visaவில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் பணி செய்யும் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் இணைந்துகொள்ள விரும்பும் வெளிநாட்டவர்கள், Common European Framework of Reference for Languages என்னும் CEFR தரநிலையின்படி A1 அல்லது அதற்கு அதிக அளவில் ஆங்கில மொழித்திறமை உடையவர்களாக இருக்கவேண்டும்.
நீங்கள் தொடர்ந்து பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்காக உங்கள் Spouse விசாவை நீட்டிக்க விண்ணப்பிக்கும்போதும், நிரந்தரமாக பிரித்தானியாவில் தங்க முடிவு செய்யும்போதும், இந்த மொழித்திறமைக்கான தேவையின் அளவு, A2, B1 என அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த விடயத்தில் சில விதிவிலக்குகளும் உள்ளன.
புதிய நிபந்தனைகள்
முன்கூட்டியே சட்டச்சிக்கல்கள் குறித்து அறிந்துகொள்வது, கைவசம் போதுமான பணம் இருப்பது, திருமணம் குறித்த உண்மையான ஆவணங்கள் வைத்திருப்பது ஆகியவை Spouse விசா பெற அத்தியாவசியமாகும்.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, புலம்பெயர்தல், அங்கு அரசியல் வரை எதிரொலித்துவரும் ஒரு முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. ஆகவே, அவர்கள் பிரித்தானியாவுக்குள் வரும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவே முயல்கிறார்கள்.
ஆகவேதான், புதிய புதிய விதிகள், நிபந்தனைகள் விதிக்கப்பட்டுக்கொண்டே உள்ளன.
துணையுடன் இணைந்துகொள்வதற்காக பிரித்தானியாவுக்குச் செல்ல விரும்புபவர்கள், பிரித்தானிய அரசு எதிர்பார்ப்பதுபோல அந்த விதிகளுக்கு, நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கும் நிலையில், Spouse விசாவுக்கான விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுவது கடினமாக இருக்காது என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.





உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
