போர்நிறுத்தம் இல்லையெனில் புடினின் அடுத்த நகர்வு... எச்சரிக்கும் ஜெலன்ஸ்கி
போர்நிறுத்தம் ஏற்படவில்லை எனில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், போரை பரந்த மற்றும் ஆழமான நிலைக்கு கொண்டு செல்வார் என உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அமைதி என்பது நம் அனைவரையும் சார்ந்திருப்பதாகவும் அனைத்து நாடுகளும் அமைதிக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ட்ரம்ப் மீது நம்பிக்கை
இதேவேளை, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் உக்ரைன் இழந்த நிலங்களை மீண்டும் பெற முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த தருணத்தை தனது நாட்டிற்கான உண்மையான ஆதரவாக மாற்ற முடியும் என ஜெலன்ஸ்கி நம்புகின்றார்.
ஒவ்வொரு வருடமும் இந்த போருக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், அதிபயங்கரமானதாக மாறி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இழந்த பகுதிகள்
உயிர்களை காப்பாற்ற உக்ரைனில் தரைக்கு கீழே வைத்தியசாலைகளுக்கு பாடசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புடின் தனது ஆக்கிரமிப்பை நடத்தாமல் இருந்திருந்தால் இவ்வாறான துயரங்கள் நடந்திருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, உக்ரைன் தனது இழந்த பகுதிகளை முழுமையாக மீட்டெடுப்பது எளிதான விடயமல்ல என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan