இலங்கையில் கிரிப்டோகரன்சி தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் கிரிப்டோகரன்சிகள் தொடர்பாக எந்த சட்டமும் இல்லை என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பணவியல் கொள்கை அறிக்கை குறித்த ஊடக சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“தற்போது எந்த சட்டமும் இல்லை. சட்டம் இல்லாத ஒன்று சட்டவிரோதமா அல்லது சட்டப்பூர்வமானதா என்று சொல்வது கடினம்.
அரசாங்கத்திற்கு யோசனை
சட்டம் இல்லையென்றால், ஒரு கட்டத்தில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கான பணம் வங்கி அமைப்பு மூலம் செலுத்த முடியாது.

இதை கையாள ஒரு குழுவை நியமிக்க நாங்கள் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளோம்.
இதுவொரு கொள்கை முடிவாகும். அரசாங்கம் இதைப் பற்றி விவாதிக்கும் போது ஒருமித்த கருத்து உள்ளது” என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri