இந்தியாவில் விமானப் பணியாளரை தாக்கிய பயணி மீது வழக்கு தாக்கல்
இந்தியாவின் லக்னோவில் இருந்து மும்பைக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர், விமான நிறுவன பணியாளரை தாக்கியதாக கூறி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ விமான நிலையத்தில் வைத்து இந்த பணியாளரை கடித்ததற்காக பெண் பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்குவாதம் ஒன்றின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து குறித்த பெண் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பெண் மன அழுத்தத்தில் இருந்ததாக பொலிஸார் விசாரணைகளின் பின்னர் தெரிவித்துள்ளனர்.
“முன்னதாக விமானத்தில் ஏறிய ஏனைய பயணிகளுடன் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
விமானக் குழுவினர் அவரை அமைதிப்படுத்த முயன்றபோது, அவர் பொறுமையை இழந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியள்ளனர்.
தமிழர் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா..! சாணக்கியன் கேள்வி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |