அவுஸ்திரேலியா- மெல்பேர்னில் நடைபெற்ற கர்நாடக இசைக் குறுங்கச்சேரி
அவுஸ்திரேலியா- மெல்பர்னில் வர்ஷா இசைக்கல்லூரியின் கர்நாடக இசைக் குறுங்கச்சேரி நடைபெற்றது.
இந்த இசைக் கச்சேரி விக்டோரியா சான்ட்லெர் சமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வர்ஷா இசைக்கல்லூரியின் மாணவனான நிஷித் ராஜன்பாபுவின் கர்நாடக இசை குறுங்கச்சேரி ஒரு மாலைப்பொழுதை ரம்மியமாக்கி இருந்தது.
இசைப்போட்டி
தனது நான்காவது வயதில் இருந்து பத்து வருடங்களாக கர்நாடக சங்கீதம் பயின்று வரும் இளம் பாடகர் நிஷித் ராஜன்பாபு பல மேடைகளில் பாடியிருக்கிறார்.
பல இசைப்போட்டிகளிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பாடி வெற்றியும் பாராட்டுதல்களையும் வெகுவாகப் பெற்றுள்ளார்.
இளம் கர்நாடக இசைக்கலைஞன் நிஷித், இலங்கையைச்சேர்ந்த ஆனந்தசிவம் ராஜன்பாபு அலங்ருதா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வராவார்.
இளம் பாடகன்
நிஷித் ராஜன்பாபு பாடும்போது சதீபன் இளங்குமரன் மிருதங்கம் வாசித்ததுடன் நர்த்தனா கனகசபை வயலின் இசைத்து அனிருத் சிவராமகிருஸ்ணமூர்த்தி கடம் வாசித்து ஹரினி சுரேஸ்காந் தம்புரா மீட்டியுள்ளார்.
அத்தோடு,செல்வி வரநதி ராமராகவன், நிக்ஷிந்த் ராஜன்பாபு, சற்சனன் வியாசன் ஆகியோர் இணைந்து வரவேற்புரை நிகழ்த்தியுள்ளார்.
மேலும், நிஷித் என்ற இளம் பாடகன் எதிர்காலத்தில் வெகுவாகப் பிரகாசிப்பாரென்று வாழ்த்துகின்றேன் என்று தொகுப்பாளர் சத்தியா நிரஞ்சன் சுட்டிக்காட்டியுள்ளமை இசை உலகுக்கு சமர்ப்பணம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





