மீண்டுமொரு யுத்தசூழலை நோக்கி நகரும் மத்தியகிழக்கு..!
ஈரான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடையே ஒரு பெரும் பதற்றமாக இருந்த போர் தற்காலிகமாக ஒரு தணிவை எட்டியுள்ளது.
இந்தநிலையில் இந்த சமாதான நகர்வுகள் எவ்வளவுக்கு சாத்தியம் பேச்சுவார்த்தைகள் சாதகமாக மாறுமா என்ற கேள்விகள் ஒருபக்கம் ஈரானில் தொடர்ந்து இடம்பெறும் கைதுகளும் தூக்குத்தண்டணை நிறைவேற்றங்களும் உலக மனித உரிமையமைப்புகளின் பாரிய கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் இவை இனி எப்படி நகரும் என்ற கேள்விகளும் எழுகின்றன.
நேற்று செய்மதி மூலம் பெறப்பட்ட படங்களில் அமெரிக்காவால் தாக்கி அழிக்கப்பட்ட அணு உற்பத்தி நிலையப்பகுதிகளில் வாகனங்கள் உலாவுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
யுரேனிய செறிவூட்டலை நிறுத்தப்போவதில்லை என்ற ஈரானின் அறிவித்தலும், ஐ.நாவின் அணுசக்தி கண்காணிப்பு நிலையத்தின் பணிப்பாளரின் கூற்றுப்படி ஈரான் இன்னமும் அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் இருக்கிறது என்ற வார்த்தைகளும் மீண்டும் ஒரு யுத்த சூழலுக்குள் மத்திய கிழக்கை தள்ளப்போகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இப்படியான ஒரு சூழலில் இந்த நகர்வுகளும் உலக அமைதியை கெடுத்துவிடுமா என்பதும் இவை தொடர்பில் தொடரும் பிரச்சனைகள் தொடர்பிலும் ஆராயக்கிறது இன்றைய அதிர்வு..