இந்தியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் சரக்கு கப்பல்சேவை
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகும் திகதி மாறி மாறி அறிவிக்கப்படும் நிலையில்,எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் வாரத்தில் இருந்து சரக்கு கப்பல் சேவை ஆரம்பமாகும் என்று உள்ளூர் ஊடகமொன்று கூறியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இது தொடர்பில் சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
இதில் இலங்கை வணிகர் கழகமும், கொழும்பை மையமாகக்கொண்ட கப்பல் நிறுவனம் ஒன்றும் பங்கேற்றன.
இதன்போது காங்கேசன்துறைக்கு எடுத்துவரப்படும் பொருட்களை களஞ்சியப்படுத்தும் வசதி குறித்து பேசப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்தியாவில் இருந்து பொருட்கள் எடுத்துவரப்படும் அதேநேரம், யாழ்ப்பாணத்தில் இருந்தும் இந்தியாவுக்கு பொருட்களை அனுப்புவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் கொழும்பின் ஊடாக தமக்கு வரும் பொருட்களின் விலையைக் காட்டிலும்,
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை மலிவு விலையில்
விநியோகிக்கமுடியும் யாழ்ப்பாண வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்