யாழில் உரியவர்களின்றி நிற்கும் கார்: பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல்
யாழ்ப்பாணம், தாவடிச் சந்தியில் வீதியோரம் அநாதரவாக 5 தினங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் தாவடிச் சந்திக்கு அருகே 5 தினங்களாக ஓர் கார் வீதியோரம் அநாதராவாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகப் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், காரின் இலக்கம் மற்றும் புகைப்படங்களை சேகரித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காருடன் இருந்த பெண்
சகல கதவுகளும் பூட்டப்பட்டுள்ளமையால் காரைப் பொலிஸாரினால் எடுத்துச் செல்ல முடியவில்லை.
எனினும், ஐந்து தினங்களுக்கு முன்னர் இந்தக் காருடன் ஒரு பெண் காணப்பட்டார் எனக் கூறப்படுகின்றது. இருப்பினும் காரின் உரிமையாளர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
