ரணிலையும் கம்மன்பிலவையும் சந்தேகிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித்
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
குண்டுவெடிப்புக்கு முன்னர் குறிப்பிட்ட புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.என்.ஜே அல்விஸ் தலைமையில் குழுவொன்றை இந்த வருட ஆரம்பத்தில் நியமித்ததன் பின்னணி குறித்து அவர் வினவியுள்ளார்.
2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று நடந்த இந்த தாக்குதல் தொடர்பாக, முன்னைய அரச புலனாய்வு சேவை, தேசிய புலனாய்வுத்துறை மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளின் நடவடிக்கைகளை விசாரிக்கவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அரசியல் பலிகடா
எனினும், ரணில் விக்ரமசிங்க புதிய குழுவொன்றை நியமித்தமை சந்தேகத்திற்குரியது என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளான சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரை அரசியல் ரீதியாகப் பலிகடா ஆக்குவதற்காகவே அல்விஸ் தலைமையிலான குழுவை முன்னாள் ஜனாதிபதி நியமித்துள்ளதாக தாம் சந்தேகிப்பதாக கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையை கையாள்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதாகத் தெரிகிறது என்றும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

உதய கம்மன்பில இத்தனை காலம் அமைதியாக இருந்தார். எனினும், இப்போது இதனை வெளிக்கொணர்கிறார் ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam