சரத் பொன்சேகாவின் கட்சியின் மனு தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டமைப்பு, இன்று உயர்நீதிமன்றில், நீதிப்பேராணை மனுவை தாக்கல் செய்துள்ளது.
வன்னி மாவட்டத்தில் தமது ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை வன்னி மாவட்டத்துக்கான தேர்தல் அதிகாரி நிராகரித்தமையை ஆட்சேபித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, சிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூவரடங்கிய குழாம், இந்த வழக்கின் தீர்ப்பை நாளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
மிகக்குறைந்த வாக்குகள்
இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா மிகக்குறைந்த வாக்குகளையே பெற்றார்.
அவர் ஏற்கனவே 2010ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து இருமுனைப் போட்டியில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam
