அநுர மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள சுகாஸ்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பிலவை விடவும் அடாத்தான இனவாத அரசியலை மேற்கொண்டவரே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற வேட்பாளருமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
அராலியில் இன்றையதினம் (22.10.2024) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு - கிழக்கு
இணைந்திருந்த வடக்கு - கிழக்கினை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பிரித்தவர்கள் ஜேவிபியும் அநுரவுமே.
சந்திரிகாவினுடைய ஆட்சி கலத்தில் அநுரகுமார விவசாய அமைச்சராக இருந்தபோதுதான் செம்மணியில் 600 இளைஞர்கள் கொண்று புதைக்கப்பட்டார்கள்.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அனுரகுமாரவின் கட்சியும், அநுரகுமாரவும்தான் கொழும்பிலே சிங்கள மக்களை திரட்டி, முள்ளிவாய்க்காலில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியவர்கள்
இப்போது உதய கம்மன்பில மீது, அநுரகுமார அவர்கள் பழி போட்டுவிட்டு தான் தப்பி விடுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
