உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கும் ரணில்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட இரண்டு குழுக்கள் குறித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (23.10.2024) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட தகவலை தொடர்ந்து விக்கிரமசிங்க அறிக்கையொன்றை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புக்களை கோடிட்டு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக புதிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக, தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகிய இரண்டு அதிகாரிகளை நியமித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை
குறித்த அதிகாரிகள் இருவரும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்த முன்னறிவிப்புகளை புறக்கணித்தமைக்கு பொறுப்பானவர்கள் என கம்மன்பில குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும், சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்னவுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக ஓய்வுபெற்ற நீதிபதி ஜானகி அல்விஸ் தலைமையிலான இந்த குழுவை, இந்த வருட ஆரம்பத்தில் ரணில் விக்ரமசிங்க நியமித்தது சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக, கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri
