யாழில் காரும் ஜே.சி.பியும் மோதி கோர விபத்து! ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று(6.5.2026) இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்றும் ஜே.சி.பி ஒன்றும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் விசாரணை
இது குறித்து மேலும் தெரியவருகையில், மருதனார்மடம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஜே.சி.பியும், யாழில் இருந்து மருதனார்மடம் நோக்கி பயணித்த காரும் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன், காரும் முழுமையாக சேதமடைந்துள்ளது.

படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
ஜேசிபியின் சாரதி சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam