மரம் விழுந்து முறிந்ததில் விபத்துக்குள்ளான கார்
கம்பஹாவிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற காரின் மீது பாரிய மரம் ஒன்று விழுந்து விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், ஹட்டன் குயில்வத்த பகுதியில், நேற்று(17) இரவு 8:00 மணியளவில் சம்பவித்துள்ளது.
மேலதிக விசாரணை
சீரற்ற காலநிலை காரணமாக குறித்த மரம், சரிந்து வீதியில் சென்றுக் கொண்டிருந்த கார் மீது இவ்வாறு விழுந்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் சாரதி மட்டுமே இருந்ததாகவும், விபத்தில் அவருக்கு காயம் ஏற்படவில்லை என்றும், காரின் பின்புறம் பலத்த சேதமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மரம் விழுந்ததால், பிரதான வீதியில் போக்குவரத்து சுமார் 30 நிமிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வட்டவளை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் மரத்தை வெட்டி அகற்றிய பின்னர், வீதியின் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
