கம்பஹாவில் வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
கம்பஹாவில் வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து கம்பஹா , மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யக்கல - கிரிந்திவெல வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
கிரிந்திவெலவிலிருந்து யக்கல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பூகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பேருந்து சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
