அபாயகரமான போதைப்பொருள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது கஞ்சா
அமெரிக்க நீதித்துறை, கஞ்சாவை மிக அபாயகரமான போதைப்பொருள் பட்டியலிலிருந்து குறைவான அபாயகரமான மருந்துகள் பட்டியலுக்கு அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது.
இதன்மூலம், ஹெரோயின் போன்ற உயிராபத்தை விளைவிக்கும் 'Schedule I' பிரிவிலிருந்து நீக்கப்பட்டு, மென்மையான மருந்துகள் அடங்கிய 'Schedule III' பிரிவிற்கு கஞ்சா தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, அமெரிக்காவின் பல தசாப்த கால போதைப்பொருள் கொள்கையில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
கடுமையான கட்டுப்பாடு
அமெரிக்க மத்திய அரசின் இந்த மாற்றமானது, கஞ்சா தொடர்பான மருத்துவ ஆராய்ச்சிகளை விரிவுபடுத்தவும், நோயாளிகளுக்குச் சிறந்த சிகிச்சை விருப்பங்களை வழங்கவும் உதவும் என தற்காலிக தலைமை சட்ட அதிகாரி டாட் பிளான்ச் (Todd Blanche) தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மத்திய சட்டப்படி கஞ்சா இன்னும் முழுமையாக சட்டப்பூர்வமாக்கப்படவில்லை.
தற்போதுள்ள மாற்றத்தின்படி, மருத்துவப் பயன்பாட்டிற்கான கஞ்சா மட்டுமே வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அனைத்து வகையான கஞ்சாவையும் பொதுவான பட்டியலுக்கு மாற்றுவது குறித்து வரும் ஜூன் மாதம் ஒரு பொது விசாரணை நடத்தப்படவுள்ளது.
1970 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் கஞ்சா மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
வங்கி நடைமுறை
இந்த புதிய வகைப்பாடு மாற்றமானது, கஞ்சா வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு வரி மற்றும் வங்கி நடைமுறைகளில் இருந்த சிக்கல்களைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான அமெரிக்கர்கள் கஞ்சாவை முழுமையாக சட்டப்பூர்வமாக்க வேண்டும் என ஆதரிக்கும் நிலையில், இந்த நடவடிக்கை அதற்கான முதற்கட்டமாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், இந்த விதியானது நடைமுறைக்கு வர இன்னும் 30 நாட்கள் ஆகும் என்பதும், இதற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட வாய்ப்புள்ளதால் இதன் முழுமையான நடைமுறையாக்கம் தாமதமாகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri