இந்தியப் பெருங்கடலில் ஈரானிய எண்ணெய் கப்பல்கள் அடுத்தடுத்து சிறைபிடிப்பு!
ஈரானில் இருந்து மசகு எண்ணெய் ஏற்றிச் சென்ற தடைசெய்யப்பட்ட மற்றுமொரு கப்பலை இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கப் படைகள் தடுத்து நிறுத்தியுள்ளன.
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, M/T Majestic X என்ற எந்நாட்டிற்கும் சொந்தமில்லாத (Stateless) கப்பலை அமெரிக்கப் படைகள் இடைமறித்து, 'ரைட்-ஒஃப்-விசிட்' முறைப்படி கப்பலில் ஏறிச் சோதனையிட்டன.
ஈரானிய எண்ணெயைக் கடத்திச் சென்றதற்காக இந்தக் கப்பல் தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
சிறைபிடிப்பு
இதேவேளை, அண்மையில் M/T Tifani என்ற கப்பலும் ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காகவும், சர்வதேசப் பொருளாதாரத் தடைகளை மீறியதற்காகவும் அமெரிக்கப் படைகளால் இதே போன்றதொரு நடவடிக்கைக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்குப் பொருள் உதவி செய்யும் இத்தகைய கப்பல்களைத் தொடர்ந்து கண்காணித்து முடக்குவோம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தொடர் நடவடிக்கைகளால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தற்போது பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam