வடக்கில் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்த பிரதான வேட்பாளர்கள்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திலிருந்து பிரசார பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இன்றையதினம் குறித்த பிரசார பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
தியாக தீபத்தின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, சுடரேட்டி வணக்கம் செலுத்திய பின்னர் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
மேலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தமிழ் மக்கள் கூட்டணி
தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சட்டத்தரணி வி.மணிவண்ணண் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி கட்சியானது தனித்து யாழில் போட்டியிடுகிறது.
இதற்கமைய கட்சியின் முதன்மை வேட்பாளரான மணிவண்ணண் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்கள் நல்லூர் ஆதீன குருமுதல்வர் மற்றும் யாழ் ஆயர் உள்ளிட்ட மதத் தலைவர்களைச் சந்தித்தனர்.
இதன் போது தேர்தல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடிதுடன் மத்த தலைவர்களிடம் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

Ethirneechal: தடபுடலாக நடக்கும் தர்ஷன் கல்யாணம்.. பதற்றத்தில் அறிவுக்கரசி- பொண்ணு யார் தெரியுமா? Manithan

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam
