யாழ். அரசாங்க அதிபர் - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடையே விசேட சந்திப்பு!
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபனுக்கும், யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டாரவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (18.10.2024) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
இந்த சந்திப்பில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் நாளை (19.10.2024) யாழ்ப்பாணத்திற்கு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூர்யா அவர்கள் விஜயம் மேற்கொண்டு பொலிஸ் பொறுப்பதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ள ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், சந்திப்பில் உதவித் தேர்தல் ஆணையாளர் இ. கி. அமல்ராஜ், யாழ்ப்பாண பொலிஸ் தலைமைப்பீட பொறுப்பதிகாரி சம்லி பலுசேனவும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri