அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் குறித்து வெளியான தகவல்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக தெற்கு கரோலினா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த தேர்தலில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பெரும்பான்மையான வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
ஜனநாயக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முதல் தேர்தல் தெற்கு கரோலினாவில் நடைபெற்றது.
கருத்து கணிப்புகள்
ஜோ பைடனை எதிர்த்து போட்டியிட்ட மரியான் வில்லியம்சனும், டீன் பிலிப்ஸும் தலா 2,000 வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், ஜோ பைடன் ஒரு லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளை பெற்று, 96 சதவீத வாக்குகளை தன் வசமாக்கியுள்ளார்.
81 வயதான ஜோ பைடனின் செல்வாக்கு சரிந்துவருவதாக கருத்து கணிப்புகள் வெளியாகி வந்த இவ்வாறு அதிகளவான வாக்குகளுடன் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |