சனத் நிசாந்தவின் சாரதிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் கார் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (05.02.2024) வெலிசறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே சாரதியான பிரபாத் எரங்கவை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு
அவரை 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் எதிர்வரும் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பயணித்த வாகனம், கொள்கலன் பாரவூர்தி ஒன்றுடன் மோதி அண்மையில் விபத்துக்குள்ளானது.
இதன்போது, காயமடைந்த முன்னாள் அமைச்சர் சனத் நிசாந்தவும், பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam