யுவதியொருவரை துன்புறுத்திய வேட்பாளர் கைது
வீட்டில் தனியாக இருந்த யுவதியொருவருக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தின் லக்கலை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முடிவடைய சில மணி நேரங்கள் இருக்கையில், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் நிகழ்வின் போது இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
புதிதாக உருவாகியுள்ள அரசியல் கட்சியொன்றின் சார்பில் லக்கல பிரதேச சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே நேற்று (03) மாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லக்கல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |