தோட்டத் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை - அறிகுறிகளுடன் 18 பேர் அடையாளம்
ஹட்டன் பிளான்டேசனுக்கு சொந்தமான 8 தோட்டங்களை சேர்ந்த சுமார் 850 தோட்டத்தொழிலாளர்களுக்கு வாய்ப்புற்று நோய் மற்றும் மார்பகப்புற்றுநோய் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
குறித்த பரிசோதனைகள் நேற்றைய தினம் (25.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் பரிசோதனை
தோட்டத்தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ஹட்டன் பிளான்டேசன் நிறுவனமும் இலங்கை புற்றுநோய் சங்கமும் இணைந்து இந்த விசேட வைத்திய முகாமை ஹட்டன் டி.கே.டப்ளியு கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த முகாமில் கலந்து கொண்ட 850 பேரில், சுமார் 400 பேருக்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொண்ட போது, மார்பகப் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளுடன் 8 பேரும், வாய்ப்புற்றுநோய்க்கான அறிகுறிகளுடன் 10 பேரும் அடையாளம் காணப்பட்டதாக ஹட்டன் பிளான்டேசன் மனிதவள முகாமையாளர் டிலான் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் மிகப்பெரிய மோசடி! விசாரணைகளில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்
அடையாளம் காணப்பட்ட அனைவரையும் மேலதிக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், வைத்திய முகாமில் பங்கேற்ற தொழிலாளர்களின் வசதிக்காக இலவச போக்குவரத்து, தேநீர் மற்றும் உணவு வசதிகளும் ஹட்டன் பிளான்டேசன் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த வைத்திய முகாம், தோட்டத் தொழிலாளர்களிடையே புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, துரிதமான சிகிச்சைகளை வழங்க வழிவகுக்கும் முக்கியமான சுகாதார முயற்சியாகக் கருதப்படுகிறது.
இலங்கையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் மிகப்பெரிய மோசடி! விசாரணைகளில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்




1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 18 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri