அமெரிக்காவைச் சூழ்ந்த கனடா காட்டுத்தீ புகை: உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ஆபத்து ஏற்படும் அபாயம்
கனடாவில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக எழுந்துள்ள அடர்ந்த புகைக் கூட்டங்கள், அமெரிக்காவின் முக்கிய நகரங்களான மிட்வெஸ்ட், வடகிழக்கு மற்றும் மிட்-அட்லாண்டிக் பகுதிகளுக்குள் பெருமளவில் நுழைந்துள்ளன.
இதனால் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசுபாடு, 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் ஆரோக்கியத்தைப் பாதித்துள்ளதுடன் பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கிண்ண இறுதிப் போட்டி
இந்தச் சூழ்நிலை, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டி குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.

நியூயோர்க் நியூஜெர்சி (மெட்லைஃப்) திறந்தவெளி மைதானத்தில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே இந்த இறுதிப் போட்டி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
காற்றில் கலந்துள்ள நச்சுப் புகையானது வீரர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான இரசிகர்களின் ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பு அற்ற சூழலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், நிலவரத்தை ஃபிஃபா அமைப்பும் அமெரிக்க அதிகாரிகளும் மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan