முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம்: இறுதிச்சடங்கு தொடர்பில் வெளியான தகவல்..

Sri Lanka Police Sri Lanka Police Investigation Death Gun Shooting
By Rakesh Jul 18, 2026 06:22 PM GMT
Report

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்புச் சம்பவம் தொடர்பில் இதுவரை 10 பேருக்கும் அதிகமானோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

64 வயதான சி.டி. விக்ரமரத்ன, நேற்று(17) காலை மாலம்பே, தலாஹேன பகுதியில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

மர்மமான முறையில் உயிரிழக்கும் முக்கிய சாட்சியாளர்கள்! எழுந்துள்ள பாரிய சந்தேகம்..

மர்மமான முறையில் உயிரிழக்கும் முக்கிய சாட்சியாளர்கள்! எழுந்துள்ள பாரிய சந்தேகம்..

முதற்கட்ட விசாரணை

தனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பரிசோதிப்பதாகக் கூறி, அதனைப் பெற்றுக்கொண்டு அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம்: இறுதிச்சடங்கு தொடர்பில் வெளியான தகவல்.. | Death Former Igp Statements Record From 10 People

இந்த மரணம் தவறான முடிவெடுக்கப்பட்ட உயிர்மாய்ப்பு என கருதப்படுவதால், பொலிஸ் ஒழுக்கக் கோவைக்கு அமைவாக அவருக்கு உத்தியோகபூர்வ பொலிஸ் மரியாதைகள் வழங்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் நடந்த வேளையில், இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மனைவி மற்றும் இளைய மகன் ஆகியோர் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய விசேட உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

ராஜபக்சவுக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள் மர்மமாக இறக்கிறார்களா..! மரணங்களில் தொடரும் மர்மம்..

ராஜபக்சவுக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள் மர்மமாக இறக்கிறார்களா..! மரணங்களில் தொடரும் மர்மம்..

இறுதிச் சடங்குகள்

இதற்கமைய, கொழும்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில், மேல் மாகாண தெற்கு விசேட விசாரணைப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம்: இறுதிச்சடங்கு தொடர்பில் வெளியான தகவல்.. | Death Former Igp Statements Record From 10 People

அத்துடன், நுகேகொட கோட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில், மாலம்பே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதற்கிடையில், சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடல் நாளை(19) ஞாயிற்றுக்கிழமை பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அவரது இறுதிச் சடங்குகள் நாளைமறுதினம்(20) திங்கட்கிழமை பிற்பகல் பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

விசாரணை முடிவை பொறுத்தே பொலிஸ் மரியாதை! சி.டி. விக்ரமரத்ன விவகாரத்தில் புதிய தகவல்

விசாரணை முடிவை பொறுத்தே பொலிஸ் மரியாதை! சி.டி. விக்ரமரத்ன விவகாரத்தில் புதிய தகவல்

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US