கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாடகமாடிய வெளிநாட்டு பெண் கைது..!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 237 கிராம் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணொருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கோலாவை சேர்ந்த 54 வயது பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் சந்தேக நபர், அங்கோலாவிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிற்கு வந்து, அங்கிருந்து கத்தார் நாட்டின் தோஹா வழியாக இலங்கைக்கு வந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
14 கொக்கைன் மாத்திரைகள் மீட்பு
விமானத்திலிருந்து இறங்கிய பின்னர், அவர் சக்கர நாற்காலியில் விமான நிலைய முனையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது குறித்த பெண்ணின் நடத்தையில் சந்தேகித்த சுங்க அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது, 14 கொக்கைன் போதைப்பொருள் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், பல போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கியதாகவும் அந்தபெண் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan