ஒரு புகைப்படத்தில் தொடங்கிய கதை... உலகக் கோப்பை இறுதியில் மெஸ்ஸி - யமால் வரலாற்று சந்திப்பு..!
உலக கால்பந்தின் வரலாற்றில் மிகச் சிறப்பான தருணங்களில் ஒன்றாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி அமையவுள்ளது.
நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா மற்றும் ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணிகள் மோதும் இந்தப் போட்டியில், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியும், அவரது வாரிசாகக் கருதப்படும் லமின் யமாலும் முதல் முறையாக ஒரே மைதானத்தில் எதிரணிகளாக களமிறங்குகின்றனர்.
2007-ல் தொடங்கிய தொடர்பு
39 வயதான மெஸ்ஸியும், 19 வயதான லமின் யமாலும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சந்திப்பது கால்பந்து ரசிகர்களுக்கு வரலாற்று தருணமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இவர்கள் இருவரும் சந்திப்பது இதுவே முதல் முறை அல்ல.

2007ஆம் ஆண்டு, பார்சிலோனா அணியின் இளம் நட்சத்திரமாக உருவெடுத்து வந்த 20 வயது மெஸ்ஸி, வெறும் ஐந்து மாத குழந்தையாக இருந்த லமின் யமாலை கையில் தூக்கி குளிப்பாட்டிய புகைப்படங்கள் இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நினைவுச் சின்னங்களாக மாறியுள்ளன.
அந்த புகைப்படங்களை பார்சிலோனாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஜோன் மோன்ஃபோர்ட் எடுத்திருந்தார்.
யூரோ 2024 தொடரில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றபோது, லமின் யமாலின் தந்தை தனது இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படத்தை "இரு ஜாம்பவான்களின் தொடக்கம்" என்ற தலைப்புடன் பகிர்ந்ததைத் தொடர்ந்து அவை மீண்டும் பரவலாக பேசப்பட்டது.
எப்படி அந்த சந்திப்பு நடந்தது
கத்தலான் நாளிதழான Sport, பார்சிலோனா மற்றும் யுனிசெஃப் இணைந்து நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற குடும்பங்களுக்கு, தங்களது குழந்தையுடன் பார்சிலோனா முதல் அணியின் வீரர்களுடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அந்த போட்டியில் லமின் யமாலின் குடும்பமும் தேர்வு செய்யப்பட்டது.

அன்றைய தினம் முற்றிலும் தற்செயலாக, லமின் யமாலுடன் புகைப்படம் எடுக்க நியமிக்கப்பட்ட வீரர் லியோனல் மெஸ்ஸிதான். அந்த புகைப்படங்கள் பார்சிலோனாவின் கேம்ப் நௌ மைதானத்தின் விருந்தினர் உடைமாற்றும் அறையில் எடுக்கப்பட்டன.
"குழந்தையை எப்படி கையாள்வது என்று மெஸ்ஸிக்கே தெரியவில்லை" புகைப்படக் கலைஞர் ஜோன் மோன்ஃபோர்ட் BBC Sport-க்கு அளித்த பேட்டியில், "மெஸ்ஸி மிகவும் அமைதியான, வெகுளியான மனிதர். ஒரு சிறிய குழந்தையை திடீரென கையில் தூக்கி புகைப்படம் எடுக்க வேண்டிய சூழல் வந்தபோது, என்ன செய்வது என்று அவருக்கே தெரியாமல் இருந்தது.
ஆனால் சில நிமிடங்களில் அதற்கேற்றபடி பழகிக் கொண்டார்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், லமின் யமாலின் தாய் ஷீலா எபானா மிகவும் ஒத்துழைப்புடன் இருந்ததாகவும், அந்த குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்தில் இருந்தாலும் மிகவும் பணிவானவர்களாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
19 ஆண்டுகளுக்கு முன்பு
லியோனல் மெஸ்ஸி 11 கோல்கள் 1 லா லிகா பட்டம் 1 UEFA சாம்பியன்ஸ் லீக் பட்டம் லமின் யமால் 56 கோல்கள் 3 லா லிகா பட்டங்கள் 1 கோபா டெல் ரே யூரோ 2024 சாம்பியன் என்கிற சாதனைகளைப் பதிவு செய்துள்ளார்.
'என் பெற்றோருக்கு நான் எதையும் திருப்பிக் கொடுக்க முடியாது' மொராக்கோவைச் சேர்ந்த முனிர் நஸ்ராவி மற்றும் ஈக்வடோரியல் கினியாவைச் சேர்ந்த ஷீலா எபானா ஆகியோரின் மகனான லமின் யமால், பொருளாதார சிரமங்களையும் மீறி தன்னை கால்பந்தில் வளர்த்த பெற்றோருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

"என்னுடைய அம்மாவும் அப்பாவும் செய்ததை, என் குழந்தைக்காகத்தான் என்னால் செய்ய முடியும். அவர்கள் செய்த உதவிக்கு நான் ஒருபோதும் ஈடு செய்ய முடியாது," என்று அவர் முன்னதாக தெரிவித்துள்ளார்.
வரலாறு படைக்கவுள்ள உலகக் கோப்பை இறுதி 19 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தையை கையில் தூக்கி குளிப்பாட்டிய மெஸ்ஸி, இன்று அதே குழந்தையுடன் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எதிரணியாக மோதவிருக்கிறார்.
ஒரு புகைப்படத்தில் தொடங்கிய இந்தக் கதை, உலக கால்பந்தின் மிகப் பெரிய மேடையில் நிறைவடையவிருக்கிறது.
மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை கனவா? அல்லது லமின் யமாலின் புதிய யுகத்தின் தொடக்கமா? என்பதற்கான பதில் ஞாயிற்றுக்கிழமை கிடைக்கவுள்ளது.
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri