அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாக மோசடி - பொலிஸாரின் தந்திரத்தில் சிக்கிய நபர்
அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் நேற்று முன்தினம் அவிசாவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நபர்களிடமிருந்து தலா 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை குறித்த நபர் பணம் பெற்றுள்ளார்.
பண மோசடி
அதற்கமைய, இவரால் மோசடி செய்யப்பட்ட மொத்தத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.

குறித்த சந்தேக நபருக்கு எதிராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அவரை கைது செய்ய அதிகாரிகள் பலமுறை முயற்சி செய்தும், அவர் தொடர்ந்து அதிகாரிகளிடமிருந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இறுதியாக, தந்திரமாக செயல்பட்ட அதிகாரிகள், வெளிநாட்டு வேலை தேவை என்று கூறி அவரைத் தொடர்புகொண்டு, அவிசாவளை நகரில் வைத்து பெரும் முயற்சிக்குப் பிறகு கைது செய்தனர்.
வெளிநாட்டு வேலை
கைது செய்யப்பட்ட நபர், இலங்கையின் முன்னணி தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் விற்பனை முகாமையாளராக பணியாற்றுபவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபருக்கு எதிராக அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் எட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமமின்றி வெளிநாட்டு வேலைகளுக்காக ஆட்களைச் சேர்த்தல் மற்றும் பண மோசடி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், நேற்று அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri