இலங்கைக்கான கனேடியத் தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம்
வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த கனேடியத்
தூதுவர் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்
இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ் தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர்கள் இன்று (09.01.2023) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
கல்வி கற்றல் நடவடிக்கை
இக்குழுவினர் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு வருகை செய்துள்ளனர்.
குறித்த விஜயத்தின் போது பொதுசன நூலகத்தின் தற்போதைய நிலைகள், வாசகர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும், மாணவர்களின் கல்வி கற்றல் நடவடிக்கை தொடர்பாகவும் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலனுடன் விரிவாக இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ் கலந்துரையாடி உள்ளார்.
இதில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகர் அனுசுயா சிவகுமார், உள்ளிட்ட தூதரக அதிகாரிகள், பொதுநூலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |