கறுப்பு உடையில் எதிர்க்கட்சியினர்: ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்
புதிய இணைப்பு
வற் வரித் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றுள்ளனர்.
இந்த வருடத்திற்கான முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமானது.
இந்தநிலையில், அரசாங்கத்தின் முறையற்ற வரிக் கொள்கை காரணமாக, நாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
2024 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு சற்றுமுன்னர் ஆரம்பமானது.
நாடாளுமன்ற இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல்
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், நாட்டில் இயங்கிவரும் நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் மற்றும் அவற்றின் சேவைகளை நெறிப்படுத்தும் நோக்கத்துடன் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை, தேசிய ஒற்றுமைக்கும் மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், தேசிய நீரளவை சட்டமூலம் மீது விவாதம் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான உத்தரவுகள் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக வெளியிடப்பட்டத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பின்னர் மாலை 05:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை ஆளுங்கட்சியால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை விவாதிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
