இலங்கைக்கான கனேடிய தூதர் யாழ். விஜயம்
இலங்கைக்கான கனேடிய நாட்டு தூதர் மெக்கினன் டேவிட் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ், நகரிலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா, செயலாளர் நா.வர்ணகுலசிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டர்.
கலந்துரையாடப்பட்ட விடயம்

இந்த சந்திப்பின்போது வடக்குக் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் நவீன மீன்பிடிமுறைமை மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் தொடர்பாக நாம் கோரிக்கைகளை முன்வைத்தபோது கனேடிய நாட்டு தூதர் சாதகமாக பரிசீலிப்பதாக தெரிவித்ததுடன் சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்தது என கடற்றொழிலாளர்களின் பிரதிநிகள் சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan