300 மில்லியன் டொலரை வீணடிக்கும் கனடா : எழுந்துள்ள குற்றச்சாட்டு
கனேடிய(Canada) சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று, மத்திய அரசின் ஹைட்ரஜன் துறைக்கான புதிய நிதி செலவினத்தை முற்றிலுமாக எதிர்த்து வருகிறது.
குறித்த திட்டமானது கனேடிய மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதாகவும், சூழலியல் நெருக்கடிக்கு உண்மையான தீர்வாக இல்லை என்றும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
உயர் செலவுகள்
இந்தியாவில் ரூ.7,035 கோடி முதலீடு செய்துள்ள கனேடிய நிதி நிறுவனம் ஜேர்மனியுடனான இந்த ஒப்பந்தத்தின் கீழ், அட்லாண்டிக் கனடாவில் ஹைட்ரஜன் உற்பத்தியை மேம்படுத்த 300 மில்லியன் கனேடியன் டொலர்கள் ஒதுக்கப்படும் என்று கனடாவின் இயற்கை வளங்கள் அமைச்சர் ஜோனத்தன் வில்கின்சன் அறிவித்தார்.
இந்த ஒப்பந்தம், 2022 இல் கனடா மற்றும் ஜேர்மனி இடையே கையெழுத்தான ஒன்று, இது கனடாவுக்கு ஜேர்மனியுடன் ஹைட்ரஜன் விநியோக பாதையை அமைக்க உதவுகிறது.
ஆனால், Environmental Defence Canada எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, இந்த திட்டத்தை "நிதி வீணாகும் செயல்" எனக் குறிப்பிடுகிறது, ஏனெனில் இது உயர் செலவுகள் மற்றும் திறமையற்ற செயல்முறைகளை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது.
இத்திட்டம் குறித்த பெரும்பாலான விடயங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளன, மேலும் இந்த திட்டம் திறமையற்றது மற்றும் ஆற்றல் வீணாகும் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தற்போதைக்கு, இந்த திட்டம் பற்றிய எதிர்மறையான கருத்துகள் அதிகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.