அமெரிக்காவுக்கு எதிராக பதில் வரிகளை அறிமுகப்படுத்திய கனடா
அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராக 19.94 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பதில் தீர்வை வரிகளை கனடா அறிவித்துள்ளது.
இது அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட புதிய தீர்வை வரிகளுக்கு நிகரான டொலர் மதிப்பைக் கொண்டுள்ளது.
அத்துடன், தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போரில் பாதிக்கப்பட்டுள்ள கனடிய வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான நிதியுதவித் திட்டத்தையும் கனடா வெளியிட்டுள்ளது.
பதில் வரி
அமெரிக்கப் பொருட்களுக்கான இந்த பதில் வரிகள் செப்டம்பர் 8 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15%, 25% மற்றும் 50% வரிகள் விதிக்கப்படும் என்றும் அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறைகளுக்கான நிதி ஆதரவைப் பொறுத்தவரை, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான ஆதரவு, நிறுவனங்களின் பணப்புழக்கத்திற்கு நிதியளிக்கும் வழிமுறை மற்றும் புதிய வரிகளால் ஆபத்தில் இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கான ஆதரவு உள்ளிட்ட புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்காக 7.5 பில்லியன் கனடிய டொலர் மதிப்பிலான உதவித் திட்டத்தை கனடா அறிவித்துள்ளது.
வரிகளைத் தவிர்ப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய 50% வரிகள் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தன.
இந்த பரஸ்பர பழிவாங்கும் வரிகள் கனடா-அமெரிக்க உறவில் ஒரு புதிய பின்னடைவைக் எடுத்துக்காட்டுகின்றன.
ட்ரம்ப் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு - அடுத்த மாதம் இடைத்தேர்தல்
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam