ஈரான் தடைகள் மற்றும் கடன் பத்திர மீள் கொள்வனவு: அமெரிக்க டொலரின் மதிப்பு உயர்வு
ஈரானுக்கு எதிரான தடைகளை அமெரிக்கா விரிவுபடுத்தியதைத் தொடர்ந்தும், நீண்டகாலக் கடன் பத்திரங்களின் வட்டி வீதங்களைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்க திறைசேரி மீள் கொள்வனவுகளை அறிவித்துள்ளதைத் தொடர்ந்தும், உலகளாவிய நிதிச் சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு மீண்டும் வலுவடைந்துள்ளது.
ஈரானுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருக்கும் நாடுகள் உடனடியாக அத்தொடர்புகளைத் துண்டிக்க வேண்டும் எனவும், தவறினால் டொலர் அடிப்படையிலான நிதி அமைப்பிலிருந்து அவர்கள் நீக்கப்படுவர் எனவும் அமெரிக்கத் திறைசேரிச் செயலர் ஸ்கொட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.
டொலரின் மதிப்பு உயர்வு
இதன் காரணமாக, எதிர்காலத்தில் டொலரைப் பயன்படுத்த முடியாமல் போவதைத் தவிர்க்கும் நோக்கில் பல நாடுகளும் முதலீட்டாளர்களும் டொலர்களைக் கொள்வனவு செய்யத் தொடங்கியுள்ளமை டொலரின் எழுச்சிக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
அதேவேளை, கடன் பத்திரச் சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களைக் குறைப்பதற்காக, நீண்டகாலக் பிணைப் பத்திரங்களை மீளக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை இரட்டிப்பாக்க அமெரிக்கத் திறைசேரி தீர்மானித்துள்ளது.

இந்த நடவடிக்கை அமெரிக்கக் கடன் பத்திரச் சந்தையில் தற்காலிக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, யூரோ மற்றும் கனேடிய டொலர் ஆகிய நாணயங்களுக்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது
அத்துடன் ஜப்பானிய யென்னுக்கு எதிராகவும் டொலர் 159.34 ஆக உயர்வடைந்துள்ளது. அதேநேரம், டொலரின் வீழ்ச்சி குறித்த அச்சம் காரணமாக கிரிப்டோகரன்சி சந்தையில் பிட்கொயின் (Bitcoin) மதிப்பு மீண்டும் எழுச்சி பெற்று 80,000 டொலர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கெஹெல்பத்தரவின் கைப்பேசியில் நடிகைகள் - அரசியல்வாதிகளின் தகவல்கள்! ஆராயப்படும் பல வங்கிக் கணக்குகள் - வெளிவரும் பகீர் தகவல்கள்