இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட குற்றக்குழு தலைவர்! பொலிஸார் வெளியிட்ட குற்றப்பட்டியல்
புதிய இணைப்பு
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கரவினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களின் பட்டியலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் வெளியிட்டுள்ளார்.
2013 ஹன்வெல்ல பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் ஒருவரை தாக்கியமை,2021 நெலுவந்தூடுவ தீவைப்புச் சம்பவம், 2021 துப்பாக்கிச்சூட்டு முயற்சி - கொலை செய்ய முயற்சி.
2022 ஹன்வெல்ல தாக்குதல், 2022 ஹரஸ்புர துப்பாக்கிச் சூடு, 2023 பாதுக்க இரட்டைக் கொலை, 2024 ஹன்வெல்ல கொலை, 2024 நெலுவந்தூடுவ வர்த்தகர் கொலை.
2025 கொஸ்மம துப்பாக்கிச் சூடு, 2025 கொழும்புத்துறை (கொல்லுப்பிட்டி) துப்பாக்கி வழக்கு, 2025 மீகொட கொலை: முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை கொலை, 2025 மீகொடவில் தப்பிச்செல்வதற்கு வசதியாக வானத்தை நோக்கி சுட்டமை ஆகிய சம்பவங்களில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் இவர் என்றும் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கரவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
டுபாயிலிருந்து இன்று (25) நாட்டிற்கு லலித் கண்ணங்கரா தொடர்பாக பொலிஸ் பிரிவினால் இன்று நடத்தப்பட்ட சிறப்பு ஊடக சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
கடுமையான குற்றச்சாட்டுகள்
அக்டோபர் 25, 2025 அன்று பொலிஸ் தலைமை அதிகாரிக்கு (IGP) கிடைத்த ஒரு சிறப்பு தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல், கொலை மற்றும் கொலை முயற்சி, கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்துதல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைத்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர் மத்திய குற்றப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது சட்டவிரோத சொத்துக்கள் குறித்து சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவும் சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
2024-ஆம் ஆண்டு முதல் இன்டர்போலால் ரெட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த 42 சந்தேகநபர்களை பொலிஸாரால் திரும்ப அழைத்து வர முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிவப்பு அறிவித்தல்
இதற்கிடையில், ரெட் நோட்டீஸ் பெற்ற மேலும் 109 சந்தேகநபர்கள் எதிர்காலத்தில் நாட்டிற்குத் திரும்ப அழைத்து வரப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ரெட் நோட்டீஸ் இல்லாத 38 சந்தேகநபர்கள் ஏற்கனவே நாட்டிற்கு திரும்ப அழைத்து வர முடிந்துள்ளது என்றும், வரும் நாட்களில் மேலும் பல சந்தேகநபர்களைத் திரும்ப அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் தனிநபர்கள் சட்டவிரோதமாகச் சேர்த்துள்ள ரூ. 3,878 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டில் ரூ. 1,549 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன.
2025-ஆம் ஆண்டில் மேலும் ரூ. 1,549 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களைக் கையகப்படுத்த முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, இந்த சொத்துக்கள் அனைத்தும் செயலிழக்கச் செய்யப்பட்டு, அரசாங்கத்தால் முழுமையாக கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri