கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம்
கனடாவின்(Canada) பிரபல ஊடகவியலாளரும் தொழில்நுட்ப வல்லுநருமான எவன் சாலமன், நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் நவீனத்துவ அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2025 மே 13 அன்று, கனடா தனது வரலாற்றில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் புதுமை அமைச்சராக ஈவன் சாலமனை(Evan Solomon) நியமித்துள்ளது.
டிஜிட்டல் புரட்சி
ஒட்டாவாவில் உள்ள ரிடோ ஹாலில் நடைபெற்ற சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும் விழாவில், ரொறன்ரோ சென்டர் தொகுதியைச் சேர்ந்த புதிய நாடாளுமன்ற உறுப்பினரான சாலமன் பதவியேற்றுள்ளார்.
டிஜிட்டல் புரட்சியை வரவேற்கும் வகையில், கனடா அரசு முக்கியமான ஒரு புதிய பொறுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய அமைச்சு நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கி, நாடு முழுவதும் டிஜிட்டல் வளர்ச்சியை ஊக்குவிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
கனடாவின் தீர்மானம்
செயற்கை நுண்ணறிவை (AI) நிர்வகிப்பதும், அதன் சட்ட மற்றும் சமூக தாக்கங்களை கவனிப்பதும் இந்த அமைச்சின் முக்கிய பொறுப்பாகும்.
சமீப காலமாகவே கனடா, உலகின் முன்னணி டிஜிட்டல் பொருளாதார நாடுகளுள் ஒன்றாக மாற பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில்,இந்த அமைச்சின் உருவாக்கம் இதற்கான ஒரு தீர்வான வழியைத் திறக்கிறது எனக் கருதப்படுகிறது.
கனடாவின் இந்த தீர்மானம், உலக நாடுகளுக்கே முன்மாதிரியாக இருக்கக்கூடும் என தொழில்நுட்பத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
