எப்போது நெருக்கடி தீரும் என்று கூற முடியாது! கைவிரித்தார் பசில்
இலங்கையின் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை எப்போது தீரும் என இப்போது உறுதியாகக் கூறமுடியாது .என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
"ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையில் ஏற்பட்டுள்ள போரால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. எனவே, உள்நாட்டிலும் விலை அதிகரிப்பு இடம்பெறுவதைத் தடுக்க முடியாது.
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், எரிபொருள் விலையை அதிகரித்துள்ள நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலை அதிகரிப்பை மேற்கொள்ளக்கூடும்.
நாட்டு மக்களுக்குத் தற்போதும் நாம் நிவாரணங்களை வழங்கி வருகின்றோம். நெருக்கடி நிலைமை எப்போது தீரும் என இப்போது உறுதியாகக் கூறமுடியாது.
ஏனெனில் உலக விவகாரங்கள் கூட உள்நாட்டு விடயத்தில் தாக்கம் செலுத்தும். எது
எப்படி இருந்தாலும் தேசிய பிரச்சினைகளை நாம் நிச்சயம் தீர்ப்போம்" - என்றும் தெரிவித்துள்ளார்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
