பல மடங்காக அதிகரிக்கும் நீர்க்கட்டணம்
எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, வீடுகளின் நீர் கட்டணம் 70 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், குறைந்த வருமானம் பெறுவோரின் வீடுகள் மற்றும் அரச பாடசாலைகளில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகரிக்கப்படும் கட்டணம்
வணிக இடங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான தண்ணீர் கட்டணம் உயர்த்தப்படும் அளவு தொடர்பில் தீர்மானம் அறிவிக்கப்படவில்லை. நீர் கட்டணத்தை உயர்த்தவும் அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இது தொடர்பான ஆவணங்களை கடந்த வெள்ளிக்கிழமை பெற்றுக்கொண்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பத்து ஆண்டுகளின் பின்னர் உயர்வு
அதற்கமைய இன்னும் சில தினங்களுக்குள் ஒவ்வொரு துறைக்கான நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுத்து அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, 10 ஆண்டுகளுக்கு பின்னரே நீர் கட்டணம் உயர்த்தப்படுகின்றது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மின் கட்டண அதிகரிப்பு காரணமாக செலவை குறைக்கும் நோக்கில், நீர் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.