10 ரூபாவினால் குறைக்கப்படும் முட்டை உணவு பொதியின் விலை! உணவக உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள்
முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டமையினால் முட்டை உணவு பொதி ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அச்சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை,முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நேற்று முதல் நடைமுறைக்கு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்திருந்தது.
முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை
இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகும். பழுப்பு அல்லது சிவப்பு நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபா என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அரசு நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலையில் முட்டையை விற்க முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இத்தொழிலை நடத்துவதற்கும், போக்குவரத்திற்கும், அதிக எரிபொருள் தேவைப்படுவதால், அதற்காக செலவிடப்படும் பணத்தின் அடிப்படையில் முட்டையின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.