கப்பல் போக்குவரத்து சிக்கல் தீவிரம்: ஈரானிலிருந்து வந்த அவசர அழைப்பு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் இடையே முக்கிய தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த உரையாடலின் போது, பிராந்தியத்திலுள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் அதிக சதவீதத்தில் உயர்ந்த எரிபொருள் விலை : தனியார் பேருந்துகள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு
மேலும், சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானியா கடும் கண்டனம்
ஈரானில் வசிக்கும் இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு ஈரான் அரசு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்குப் பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இதேவேளையில், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரிட்டனின் டியேகோ கார்சியா (Diego Garcia) தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் தோல்வியடைந்த நிலையில், அதற்கு பிரித்தானியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் இத்தகைய " reckless" தாக்குதல்கள் மற்றும் உலகின் 20 சதவீத எரிசக்தி விநியோகத்தைக் கையாளும் ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் முயற்சிகள், பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் சாடியுள்ளது.
இந்த மோதல்களின் விளைவாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பரல் ஒன்றுக்கு 106 டொலராக உயர்ந்துள்ளது, இது போர் தொடங்குவதற்கு முன்பு இருந்த 70 டொலருடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
இங்கிலாந்தின் கால்பந்தில் அதிக செலவு செய்யும் அணிகள் படுதோல்வி: அதிர்ச்சியில் ரசிகர்கள் News Lankasri