தாதியர் பயிற்சிக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பம் கோரல்
தாதியர் பயிற்சிக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் 2023 ஆம் ஆண்டுக்கான தாதியர் பயிற்சி கற்கை நெறிக்கு ஆட்சேர்ப்பதற்கு இணையத்தள வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக 2019, 2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் சித்தியடைந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஒரு விண்ணப்பதாரிக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே
விண்ணப்பங்களை எதிர்வரும் அக்டோபர் 18 ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் என்றும் ஒரு விண்ணப்பதாரியினால் ஒரு விண்ணப்பம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன், வர்த்தமானி அறிவித்தல் மற்றும் இணையத்தளம் வழியாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசிக்க வேண்டும் என்பதுடன் விண்ணப்பங்களை சுகாதார அமைச்சின் www.health@gov.lk எனும் இணையத்தளத்தினூடாக மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தளம் ஊடாக மாணவர் தாதியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க பின்வரும் இணையவழி இணைப்பை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. recruit.health.gov.lk/





என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam
